ஒன்றாரியோ மாகாணத்தில் நடைபெற்ற தேர்தலில் டக் போர்ட் தலைமையிலான முற்போக்கு கன்சர்வேட்டிவ் கட்சி அமோக வெற்றியை பதிவு செய்துள்ளது.
முற்போக்கு கன்சர்வேட்டிவ் கட்சி 83 ஆசனங்களையும், என்.டி.பி கட்சி 31 ஆசனங்களையும், லிபரல் கட்சி 8 ஆசனங்களையும், பசுமைக் கட்சி ஒரு ஆசனத்தையும், சுயாதீனக் கட்சி ஒரு ஆசனத்தையும் பெற்றுக்கொண்டுள்ளன.
போர்ட் அரசாங்கம் இரண்டாவது தடவையாகவும் பெரும்பான்மை வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது.
பெருந்தொற்று காலப் பகுதியில் பல்வேறு சவால்கள் நெருக்கடிகள் ஏற்பட்டிருந்த நிலையில் போர்ட் அரசாங்கம் மீளவும் ஆட்சியை கைப்பற்றிக் கொண்டுள்ளது.