கியூபெக்கில் குரங்கம்மை நோயாளர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
மாகாணத்தில் மொத்த குரங்கம்மை நோயாளிகள் எண்ணிக்கை 71 ஆக உயர்வடைந்துள்ளது.
மாகாண சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மே மாதம் 26ம் திகதி கனடாவில் முதன் முறையாக குரங்கம்மை நோயாளிகள் பதிவாகியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
உலக அளவில் இதுவரையில் 550 குரங்கம்மை நோயாளிகள் பதிவாகியுள்ளனர்.