இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்றான வங்காளதேசத்தில் முக்கிய கடல் துறைமுகமான சிட்டகாங் பகுதி வெளியே 40 கி.மீ தொலைவில் சேமிப்புக் கிடங்கு ஒன்று உள்ளது. இந்த கிடங்கில் நேற்று நள்ளிரவு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்ததை அடுத்து போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் வாகனங்களுடன் விரைந்து தீயைக் கட்டுக்குள் கொண்டு வர முயன்றனர். அப்போது கிடங்கில் திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. இதில் தீயணைப்பு வீரர்கள் உள்பட சுமார் 450 பேர் படுகாயமடைந்தனர். இந்த தீ விபத்தில், 16 பேர் பலியாகியுள்ளனர்.
விபத்து குறித்து வங்கதேச இன்லேண்ட் கண்டெய்னர் சங்கத்தின் செய்தித் தொடர்பாளர் ரூஹூல் அமின் சிக்தர் கூறியதாவது:- 30 ஏக்கர் பரப்பளவில் உள்ள தனியார் கிடங்கில் சில ஹைட்ரஜன் பெராக்சைடு உள்ளிட்ட ரசாயனங்கள் இருந்தது.
கிடங்கில் 600 பேர் பணியாற்றி வந்தனர். தீ விபத்துக்கான காரணம் குறித்து தெரியவில்லை. போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.