அமெரிக்காவின் பிலடெல்பியா நகரில் மக்கள் அதிக அளவில் கூடியிருந்த பகுதியில் துப்பாக்கி ஏந்திய சில மர்ம நபர்கள் திடீரென வந்து துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர்.
இதனை சற்றும் எதிர்பாராத மக்கள் அலறியடித்து கொண்டு அனைத்து திசைகளிலும் ஓடினர். துப்பாக்கி சூடு நடக்கும் சத்தம் கேட்டு ரோந்து பணியில் இருந்த பிலடெல்பியா போலீசார் உடனடியாக சம்பவம் நடந்த தெற்கு தெரு பகுதிக்கு விரைந்தனர்.
அவர்களில் போலீஸ் அதிகாரி ஒருவர் துப்பாக்கி ஏந்திய நபர்கள் மீது அதிரடியாக துப்பாக்கியால் சுட்டார். இதில், மர்ம நபர் ஒருவருக்கு காயம் ஏற்பட்டது. எனினும், மர்ம நபர்களின் தாக்குதலில் 3 பேர் உயிரிழந்து உள்ளனர்.
அவர்களில் 25 வயது பெண் மற்றும் 22 வயது ஆண் ஆகிய இருவர் அடங்குவர். நடப்பு ஆண்டில் மட்டுமே 140க்கும் மேற்பட்ட துப்பாக்கி சூடு சம்பவங்கள் நடந்துள்ளன என துப்பாக்கி வன்முறைக்கான ஆய்வு குழு ஒன்று அளித்துள்ள தகவல் தெரிவிக்கின்றது.