கனடாவில் பாலின் விலையை அதிகரிப்பது குறித்து கவனம் செலுத்தப்பட்டு வருகின்றது.
கனேடிய பாற்பண்ணையாளர்கள் பாலின் விலைகளை உயர்த்துவதற்கு திட்டமிட்டுள்ளனர்.
உக்ரைன் போர், உற்பத்திச் செலவு அதிகரிப்பு போன்ற காரணிகளினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டில் ஏற்கனவே ஒரு தடவை பாலின் விலை உயர்த்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கடந்த பெப்ரவரி மாதம் எட்டு சதங்களினால் பாலின் விலை உயர்த்தப்பட்டிருந்தது.
இந்த நிலையில் பாலின் விலையை மீளவும் உயர்த்துவதற்கு அனுமதிக்குமாறு பாற்பண்ணையாளர்கள் கோரியுள்ளனர்.