அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு நடத்துவதாக மிரட்டிய இளைஞர் கைது
அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு நடாத்துவதாக மிரட்டல் விடுத்த கனேடிய இளைஞரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
17 வயதான இளைஞர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
புளொரிடாவில் நடைபெற்ற ஓரினச் சேர்க்கையாளர் பேரணி மீது துப்பாக்கிச் சூடு நடாத்துவதாக குறித்த இளைஞர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இணையத்தின் ஊடாக குறித்த நபர் இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கனேடிய பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட இளைஞர், அமெரிக்காவிற்கு நாடு கடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.