உக்ரேனில் இருந்து விவசாய பொருட்கள் ஏற்றுமதிக்காக கருங்கடலில் ஒரு பாதுகாப்பு தாழ்வாரத்தை திறப்பது குறித்து இன்று காலை ரஷிய வெளியுறவு மந்திரி செர்ஜி லாவ்ரோவ் மற்றும் துருக்கிய வெளியுறவு மந்திரி மெவ்லுட் கவுசோக்லு ஆகியோர் இன்று பேச்சு வார்த்தை நடத்தினர்.
உக்ரைன் உணவு ஏற்றுமதியாளராக உள்ளது. உலக சந்தையில் வர்த்தகம் செய்யப்படும் சூரியகாந்தி எண்ணெயில் 42சதவீதம் , சோளத்தில் 16 சதவீதம் மற்றும் கோதுமையில் 9 சதவீதம் பங்களிக்கிறது.
சில நாடுகள் உக்ரேனிய ஏற்றுமதியை பெரிதும் சார்ந்துள்ளன. உக்ரைனின் கருங்கடல் துறைமுகங்களை மூடுவதன் மூலம் உலகளாவிய பஞ்சத்தின் அபாயத்தை ரஷியா உருவாக்குவதாக மேற்கத்திய நாடுகள் குற்றம் சாட்டின, ஆனால் அதை ரஷியா மறுத்துள்ளது.
போரினால் பெரும் சேதத்தை சந்தித்துள்ள உக்ரைனுக்கு அடுத்த சில மாதங்கள் பொருளாதார ரீதியாக தாக்கு பிடிக்க 1.5 பில்லியன் டாலர் நிதி உதவி தொகுப்பை வழங்குவதாக உலக வங்கி அறிவித்தது. இத்தொகை மூலம் அரசு மற்றும் சமூக ஊழியர்களுக்கு ஊதியம் உள்ளிட்டவற்றை உக்ரைன் அரசு வழங்க முடியும் என தெரிவித்துள்ளது.