கனடாவில் நிரந்தரமாக வசிப்பவர்கள் மற்றும் கனேடிய பிரஜைகளுக்கும் நலன் தரும் வகையில் சுப்பர் வீசா நடைமுறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
கனேடிய பிரஜைகள், நிரந்தரமாக வசிப்பவர்களது பெற்றோர் மற்றும் தாத்தா, பாட்டி ஆகியோரை கனடாவிற்கு அழைத்து வர சுப்பர் வீசா நடைமுறை அறிமுகம் செய்யப்பட்டது.
கடந்த 2011ம் ஆண்டு முதல் இந்த நடைமுறை அமுலில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த காலங்களில் இந்த சுப்பர் வீசாவில் இரண்டு ஆண்டுகள் ஒரே தடவையில் பெற்றோர் மற்றும் தாத்தா பாட்டி ஆகியோரை கனடாவிற்கு அழைத்து வந்து தங்க வைத்துக்கொள்ள முடியும்.
எனினும் புதிய திருத்தத்தின் கீழ் ஏழு ஆண்டுகள் வரையில் கால நீடிப்பு செய்யப்பட்டுள்ளதுடன், பல தடவைகள் அழைத்து வர முடியும் எனவும் இந்த வீசா பத்து ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.