Home இந்தியா ஹஜ் யாத்ரிகர்களுக்கு மாநில அரசு நிதியுதவி………

ஹஜ் யாத்ரிகர்களுக்கு மாநில அரசு நிதியுதவி………

by Jey

இந்தியாவிலிருந்து ஹஜ் யாத்திரை செல்லும் இஸ்லாமியர்களுக்கு மத்திய அரசால் வழங்கப்பட்டு வந்த மானியம் 2018-ம் ஆண்டு முதல் நிறுத்தப்பட்ட நிலையில், இஸ்லாமிய சமூகத்தினைச் சேர்ந்த பெரியவர்கள், ஜமாத்தார்கள், ஹஜ் கமிட்டியைச் சேர்ந்தவர்கள் என்னை நேரில் சந்தித்து தொடர்ந்து ஹஜ் யாத்ரிகர்களுக்கு மாநில அரசு நிதியுதவி அளித்திட வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தனர்.

அதனைத் தொடர்ந்து, எனது தலைமையிலான அம்மாவின் அரசு 2018-ம் ஆண்டு தமிழகத்திலிருந்து ஹஜ் யாத்திரை செல்லும் இஸ்லாமியர்களுக்கு 6 கோடி ரூபாயை அரசு மானியமாக வழங்கி ஹஜ் புனிதப் பயணம் மேற்கொண்ட 3,769 இஸ்லாமியர்களுக்கு தலா 15,913 ரூபாய் அவர்களது வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டது.

2019-ம் ஆண்டு ஹஜ் புனிதப் பயணம் மேற்கொண்ட 4,379 ஹஜ் யாத்ரிகர்களுக்கு தலா 13,639 ரூபாய் அவர்களது வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டது. 2020-ம் ஆண்டு கரோனா நோய்த் தொற்றின் காரணமாக ஹஜ் யாத்திரை ரத்து செய்யப்பட்டது.

 

related posts