Home இந்தியா 200 ரயில் பெட்டிகளில், சி.சி.டி.வி.

200 ரயில் பெட்டிகளில், சி.சி.டி.வி.

by Jey

தெற்கு ரயில்வேயில் அடுத்தகட்டமாக, 200 ரயில் பெட்டிகளில், சி.சி.டி.வி., கேமராக்கள் பொருத்தும் பணி, இந்த ஆண்டுக்குள் முடிக்கப்படும்’ என, ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குற்றங்களை தடுக்க, 2017ல், சென்னை சென்ட்ரல் – அரக்கோணம் தடத்தில், இரண்டு மின்சார ரயில்களில் சோதனை முயற்சியாக, கேமராக்கள் பொருத்தப்பட்டன. அதன்பின், விரைவு ரயில் பெட்டிகளிலும், கேமரா பொருத்தும் திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டு வருகிறது.

தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது: பயணியரின் பாதுகாப்பு கருதி, ரயில் பெட்டிகளில், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. கொரோனா காலத்தில், இந்த பணிகள் சற்று பாதிக்கப்பட்டன. தற்போது, இந்த பணிகள் மீண்டும் வேகமெடுத்துள்ளன.

தற்போது நிலவரப்படி, தமிழ்நாடு எக்ஸ்பிரஸ், கோவை சதாப்தி உள்ளிட்ட பல்வேறு விரைவு ரயில்களில், கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன. புதிய எல்.எச்.பி., பெட்டிகளாக, ரயில்களை மாற்றும்போதே கேமரா வசதி செய்யப்படுகிறது.

தற்போது வரையில், சென்னை கோட்டத்தில் 200 ரயில் பெட்டிகளில் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த ஆண்டு இறுதிக்குள் மேலும், 200 ரயில் பெட்டிகளில் கேமராக்களை பொருத்த உள்ளோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

related posts