அமெரிக்க ஜனாதிபதி கனடாவிற்கு விஜயம் செய்ய உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
எதிர்வரும் மாதங்களில் அவர் இவ்வாறு கனடாவிற்கு விஜயம் செய்ய உள்ளதாகக் குறிப்பிப்பிடப்படுகின்றது.
கனேடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோவுடனான சந்திப்பின் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதியாக பதவி ஏற்றுக்கொண்டதன் பின்னர் பய்டன் கனடாவிற்கு விஜயம் செய்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இரு தரப்பு உறவுகளை வலுப்படுத்திக் கொள்வது குறித்தும் இந்த சந்திப்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது என தெரிவிக்கப்படுகின்றது.