எயார் கனடா நிறுவனம் பத்து வீதமான பயணங்களை ரத்து செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த ஜூன் மாதத்தில் இவ்வாறு விமானப் பயணங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
றொரன்டோவின் பியர்சன் விமான நிலையத்தில் இவ்வாற விமானப் பயணங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
விமான நிலையத்தின் நிலைமைகள் ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல றொரன்டோ மேயர் ஜோன் டோரி அண்மையில் குற்றம் சுமத்தியிருந்தார்.
பணியாளர் பற்றாக்குறை போன்ற காரணிகளினால் இவ்வாறு விமானப் பயணங்கள் ரத்து செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.