Home உலகம் பாகிஸ்தானில் மாரியம்மன் கோயில் சிலைகள் சேதம்

பாகிஸ்தானில் மாரியம்மன் கோயில் சிலைகள் சேதம்

by Jey

பாகிஸ்தானில் மாரியம்மன் கோயில் சூறையாடப்பட்டு சிலைகள் சேதப்படுத்தப்பட்டன.
பாகிஸ்தானில் 75 லட்சம் ஹிந்துக்கள் வாழ்வதாக அந்நாட்டின் அதிகாரப்பூர்வ ஆவணங்கள் தெரிவிக்கின்றன.

இங்கு சிந்து மாகாணத்தில் ஹிந்துக்கள் பெரும் எண்ணிக்கையில் வசிக்கின்றனர்.இந்நிலையில் பாகிஸ்தானில் உள்ள ஹிந்து கோயில்கள் அவ்வப்போது சூறையாடப்படுகின்றன.

கராச்சியின் கோரங்கி என்ற இடத்தில் உள்ள மாரியம்மன் கோயில் நேற்று முன்தினம் சூறையாடப்பட்டது.இருசக்கர வாகனத்தில் வந்த ஆறு பேர் கோவிலுக்குள் புகுந்து சாமி சிலைகளையும் கோயில் கட்டடங்களையும் சேதப்படுத்தினர்.

அங்கிருந்த பொருட்களை அடித்து நொறுக்கி சூறையாடினர்.இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து தாக்குதல் நடத்தியவர்களை தேடி வருகின்றனர்.

related posts