Home உலகம் கடுமையான நிதி நெருக்கடியில் பாகிஸ்தான்

கடுமையான நிதி நெருக்கடியில் பாகிஸ்தான்

by Jey

பாகிஸ்தான் கடுமையான நிதி நெருக்கடியில் தத்தளித்து வருகிறது. குறைந்து வரும் அன்னிய செலாவணி கையிருப்பு, அதிகரித்து வரும் திருப்பி செலுத்த வேண்டிய கடன், டாலருக்கு நிகரான பாகிஸ்தான் ரூபாய் மதிப்பு வீழ்ச்சி போன்ற பல சிக்கல்களை அந்த நாடு எதிர் கொண்டு வருகிறது.

இந்த நிலையில் நிதிப்பற்றாக்குறையைக் கட்டுப்படுத்தவும்,சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து அழுத்தம் கொடுக்கப்பட்ட நிலையில்,அரசாங்கம் பணக்காரர்கள் மீதான வரிகளை அதிகரிப்பதாகவும், அரசு அதிகாரிகள் புதிய கார்கள் வாங்குவதைத் தடைசெய்யும் என்றும் பாகிஸ்தான் நிதி மந்திரி மிப்தா இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.

ஜூலையில் தொடங்கும் 2022- 23 நிதியாண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை வெளியிட்ட இஸ்மாயில், பணக்காரர்களுக்கான வரிகளை அதிகரிப்பதாகவும், கார்களை இறக்குமதி செய்வதைத் தடை செய்வதாகவும், அரசு அதிகாரிகள் புதிய கார்கள் வாங்க தடை செய்ய இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார் .

மேலும் இது குறித்து, நாங்கள் கடினமான முடிவுகளை எடுக்கத் தொடங்கிவிட்டோம் எனவும் ஆனால் கடினமான முடிவுகளை எடுப்பதில் இது முடிவல்ல என அவர் கூறியுள்ளார்.

related posts