Home கனடா கனடாவில் குரங்கம்மை நோயாளர் எண்ணிக்கை அதிகரிப்பு

கனடாவில் குரங்கம்மை நோயாளர் எண்ணிக்கை அதிகரிப்பு

by Jey

கனடாவில் குரங்கம்மை நோயாளிகள் எண்ணிக்கை அதிகரிப்பு பதிவாகியுள்ளது.

இதுவரையில் கனடாவில் மொத்தமாக 112 பேர் குரங்கம்மை நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நாடு முழுவதிலும் இவ்வாறு குரங்கம்மை நோயாளிகள் பதிவாகியுள்ளதாகவும், இவ்வாறு பாதிக்கப்பட்ட அனைவரும் ஆண்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

கனேடிய பொதுச் சுகாதார அலுவலக பிரதானி டொக்டர் திரேசா டேம் இதனைத் தெரிவித்துள்ளார்.

கியூபெக் மாகாணத்தில் 98 பேருக்கு குரங்கம்மை நோய் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

எவ்வாறெனினும், இப்போதைக்கு பாரியளவில் தடுப்பூசி ஏற்றப்பட வேண்டிய அவசியம் கிடையாது என தெரிவிக்கப்படுகின்றது.

 

related posts