ஒன்றாரியோவில் எரிவாயு விலை குறைவடையும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.
அண்மைய நாட்களாக எரிவாயுவின் விலைகள் அதிகரிப்பினை பதிவு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த பின்னணியில், இன்றைய தினம் மாகாணத்தில் எரிவாயு விலைகளில் சாதக நிலைமை உருவாகும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.
உலக அளவில் எரிபொருள் விலைகள் உயர்வடைந்து செல்வதுடன் தட்டுப்பாட்டு நிலையையும் அவதானிக்க முடிகின்றது.
கடந்த வார இறுதியில் றொரன்டோ பெரும்பாக பகுதியில் ஒரு லீற்றர் எரிவாயுவின் விலை 215.9 சதங்கள் என்ற அடிப்படையில் விற்பனை செய்யப்பட்டிருந்தடமை குறிப்பிடத்தக்கது.