கனடாவில் கோவிட் தடுப்பூசி நடைமுறையில் அந்நாட்டு அரசாங்கம் தளர்வினை அறிவித்துள்ளது.
குறிப்பாக உள்நாட்டு வெளிநாட்டு விமானப் பயணிகள் தடுப்பூசி சான்றிதழ்களை சமர்ப்பிக்க வேண்டும் என்ற நடைமுறை தளர்த்தப்பட உள்ளது.
எதிர்வரும் 20ம் திகதியுடன் இந்த புதிய நடைமுறை அறிமுகம் செய்யப்பட உள்ளது.
இதன்படி, தடுப்பூசி ஏற்றிக் கொள்ளாத கனேடியர்கள் உள்நாட்டு வெளிநாட்டு விமான மற்றும் ரயில் பயணங்களை மேற்கொள்ள அனுமதிக்கப்படுவர் என்பது குறிப்பிடத்தக்கது.
எனினும், இந்த பயணிகள் நாட்டுக்குள் பிரவேசிக்கும் போது பரிசோதனைகள் மற்றும் தனிமைப்படுத்தல் நடைமுறைகளை பின்பற்ற வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், கனடாவிற்குள் பிரவேசிக்கும் வெளிநாட்டுப் பிரஜைகள் தடுப்பூசி சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும் என்ற நடைமுறையில் மாற்றமில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.