நேஷனல் ஹெரால்டு வழக்கில் ராகுல்காந்தியிடம் தொடர்ந்து 2-வது நாளாக அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது. இந்த விசாரணை இரவு 9 மணிக்கு நிறைவடைந்தது.
2-வது நாளில் நேற்று 8½ மணி நேரம் விசாரணை நடந்தது. இந்த விசாரணைக்காக, அமலாக்கத்துறை அலுவலகத்தை சுற்றிலும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தது. சி.ஆர்.பி.எப். படையினர், கலவர தடுப்பு போலீசார், டெல்லி போலீசார் ஆகியோர் பெருமளவு குவிக்கப்பட்டு இருந்தனர்.
அணுகுசாலைகள் அனைத்தும் தடுப்புகளால் மறைக்கப்பட்டு இருந்தன. இதற்கிடையே ராகுல்காந்தியிடம் 3-வது நாளாக விசாரணை நடத்தி வருகிறது. அவரிடம் அதிகாரிகள் கேள்விகளை கேட்டு வருகின்றனர். இந்த வழக்கு தொடர்பாக சோனியாகாந்தி ஜூன் 23ல் ஆஜராக உள்ளார்.