இனவாத அடிப்படையில் செயற்பட்டமைக்காக றொரன்டோ பொலிஸார் மன்னிப்பு கோரியுள்ளனர்.
றொரன்டோ பொலிஸார் நிற ரீதியான ஒடுக்குமுறைகளை மேற்கொண்டனர் என அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
றொரன்டோ பொலிஸார் நிற ரீதியான ஒடுக்குமுறைகளை மேற்கொண்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்தக் குற்றச்சாட்டுக்களுக்காக றொரன்டோ பொலிஸ் பிரதானி ஜேம்ஸ் ராமர் மன்னிப்பு கோரியுள்ளார்.
கடந்த 2020ம் ஆண்டில் ஒப்பீட்டளவில் பொலிஸார் நிற ரீதியான ஒடுக்குமுறைகளை பிரயோகித்துள்ளனர் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
குறிப்பாக கறுப்பின மக்கள் மீது பொலிஸார் கூடுதல் பலத்தைப் பிரயோகித்தனர் என தெரிவிக்கப்படுகின்றது.