நேஷனல் ஹெரால்டு பத்திரிகை பங்கு விற்பனை விவகாரம் தொடர்பாக, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியிடம் அமலாக்கத் துறை அதிகாரிகள் கடந்த மூன்று தினங்களாக தீவிர விசாரணை நடத்தினர்.
டெல்லியில் சுமார் 10 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. மூன்றாவது நாளாக நேற்றும் விசாரணை நடைபெற்றது. தொடர்ந்து நாளை விசாரணை நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை கண்டித்து காங்கிரஸ் சார்பில் டெல்லி உட்பட நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்ற நிலையில், அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாக தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் கைது செய்யப்பட்டனர். ராகுல் காந்தியிடம் அமலாக்க இயக்குனரகம் நடத்தும் விசாரணைக்கு எதிரான போராட்டங்களின் போது, டெல்லி போலீசாரால் காங்கிரஸ் கட்சி எம்.பி.க்கள் தவறாக நடத்தப்பட்டதாகக் கூறப்பட்டது.
காங்கிரஸ் தலைவர்கள், தொண்டர்களை போலீசார் குண்டுக்கட்டாக தூக்கி சென்று அப்புறப்படுத்தினர். அவர்களை கைது செய்து பஸ்களில் ஏற்றி அழைத்து சென்றனர்.
ஒருநாள் பாதிப்பு 12 ஆயிரத்தை கடந்தது..! இந்த விவகாரம் தொடர்பாக, நாடாளுமன்ற கட்சி அலுவலகத்தில் காங்கிரஸ் எம்.பி.க்கள் கூட்டம் இன்று நடைபெறுகிறது. மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவை, காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி தலைமையிலான குழுவினர் சந்திக்க உள்ளனர்.
காங்கிரஸ் எம்.பி.க்களை டெல்லி போலீசார் தாக்குவதாக சபாநாயகரை சந்தித்து புகார் அளிக்க காங்கிரஸ் முடிவு செய்துள்ளது. மேலும், நாடு முழுவதும் கவர்னர் மாளிகைகளை இன்று முற்றுகையிட காங்கிரஸ் கட்சியினர் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இதற்கிடையில், டெல்லி போலீஸ் தரப்பு இந்த புகார்களை மறுத்துள்ளது. காங்கிரஸ் கட்சி எம்.பி.க்கள் போராட்டங்களுக்கு தேவையான அனுமதியை பெறவில்லை என்று குற்றம் சாட்டியது. காங்கிரசாரின் தொடர் போராட்டம் காரணமாக டெல்லி அமலாக்கத்துறை அலுவலகத்தை சுற்றி சி.ஆர். பி.எப். படையினர், கலவர தடுப்பு போலீசார், டெல்லி போலீசார் குவிக்கப் பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்