தற்போது இலங்கையில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையை விரைவில் வழமைக்கு திருப்ப முடியாது என மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
இலங்கை முன்கூட்டியே சர்வதேச நாணய நிதியத்தை நாடியிருக்க வேண்டும்.
அவ்வாறு நாடியிருந்தால் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை தடுத்திருக்கலாம்.
வெளியிலிருந்து உதவி கேட்க தாமதம் செய்தது தவறு எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.