கனடாவில் கோவிட் பரவுகை மீண்டும் உயரக் கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நாட்டில் கோவிட் குறித்த சுகாதார கெடுபிடிகள் பெருமளவில் தளர்த்தப்பட்டுள்ளது.
மேலும் கோடை காலம் ஆரம்பமாக உள்ள நிலையில் கோவிட் தொற்று பரவுகை மேலும் உயர்வடையும் சாத்தியங்கள் உண்டு என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுகாதார அதிகாரிகளினால் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஒமிக்ரோன் திரிபு காரணமாக இவ்வாறு நோய்த் தொற்று பரவும் சாத்தியங்கள் வெகுவாக காணப்படுகின்றது என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக ஒமிக்ரோனின் உப திரிபுகளான BA.4 மற்றும் BA.5என்பனவற்றினால் இவ்வாறான ஆபத்து காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
அமெரிக்காவிலும் ஐரோப்பிய நாடுகளிலும் ஒமிக்ரோன் காரணமாக நோய்த் தொற்று அதிகரித்துச் செல்வதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
எவ்வாறெனினும், கனடாவில் தொற்று உறுதியாளர் எண்ணிக்கையும், வைத்தியசாலை அனுமதிகளும் தற்போதைக்கு வெகுவாக அதிகரிக்கவில்லை என நாட்டின் பொதுச் சுகாதார அலுவலகத்தின் பிரதானி டொக்டர் திரேசா டேம் தெரிவித்துள்ளார்.