Home உலகம் ஸ்பெயினில் அதிகரித்துள்ள வெப்ப அலை

ஸ்பெயினில் அதிகரித்துள்ள வெப்ப அலை

by Jey

ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான ஸ்பெயினில் வரும் 21 ஆம் திகதி முதல் கோடைக்காலம் தொடங்குகிறது.

ஆனால் அதற்குள் அங்கு வெப்ப அலையின் தாக்கம் அதிகரித்துள்ளது. கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு இந்த ஆண்டு ஸ்பெயினில் வெப்ப அலையின் தாக்கம் அதிகமாக இருப்பதாக வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த 3 நாட்களாக ஸ்பெயினில் சராசரி வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸ் என்ற அளவில் உள்ளது. வடக்கு ஆப்பிரிக்கா மற்றும் சகாரா பாலைவனத்தில் இருந்து வீசிய வெப்ப காற்று காரணமாக ஸ்பெயில் வெப்ப அலை அதிகரித்துள்ளதாகவும், இந்த வெப்ப அலையின் தாக்கம் படிப்படியாக குறையும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

 

related posts