அமெரிக்காவில் அண்மை காலத்தில் துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் அதிகரித்துள்ளன. இதனை ஒடுக்க அந்நாட்டு அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இந்த நிலையில், நேற்று இரவு வாஷிங்டன் டி.சி.யில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் மர்ம நபர் ஒருவர் திடீர் துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு தப்பித்துவிட்டார்.
இசை நிகழ்ச்சி நடக்கும் இடத்திற்கு அருகில் நடைபெற்ற இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில், மர்ம நபர், தன்னிடம் இருந்த துப்பாக்கியை கொண்டு பொதுமக்கள் மீது கண்மூடித்தனமாக சுட்டதில் ஒரு போலீஸ்காரர் உட்பட பலர் காயமடைந்தனர்.
முதற்கட்ட அறிக்கையின்படி, உயிரிழப்பு மற்றும் காயமடைந்தவர்கள் உள்ளிட்டோர் விவரங்கள் இன்னும் முழுமையாக கிடக்கவில்லை.
இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தின் போது காயமடைந்தவர்களில் ஒரு போலிஸ் அதிகாரியும் அடங்குவார். சந்தேகப்படும் நபரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.