தூத்துக்குடி பள்ளி மாணவன் தயாரித்த பார்வைற்றோருக்கான மடக்கு குச்சிகளை மாற்றுத்திறனாளிகளுக்கு கலெக்டர் செந்தில்ராஜ் வழங்கினார். குறைதீர்க்கும் நாள் தூத்துக்குடி மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று காலை நடந்தது. கூட்டத்துக்கு கலெக்டர் செந்தில்ராஜ் தலைமை தாங்கினார்.
மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணபிரான் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மக்கள் மனு கொடுத்தனர். கல்விஉதவித்தொகை, பட்டா பெயர் மாற்றம், மாற்றுத்திறனாளி நல உதவித் தொகை, முதியோர் உதவித்தொகை, விதவை உதவித் தொகை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் கோரி மொத்தம் 450 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.
பெறப்பட்ட மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். நிவாரண நிதி தொடர்ந்து தமிழக முதல்-அமைச்சர் பொது நிவாரண நிதியின் கீழ் தூத்துக்குடி மாவட்டத்தில் பாம்பு கடித்து மரணம் அடைந்த 2 நபர்களின் வாரிசுதாரர்களுக்கு தலா ரூ.1 லட்சத்துக்கான காசோலையும், நீரில் மூழ்கி மரணம் அடைந்த ஒருவரின் வாரிசுதாரருக்கு ரூ.2 லட்சத்துக்கான காசோலையும், வீடு இடிந்து விழுந்து இறந்த ஒருவரின் வாரிசுதாரருக்கு ரூ.1 லட்சத்துக்கான காசோலை உள்பட ரூ.5 லட்சத்துக்கான காசோலைகளை மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் வழங்கினா