பிரம்டனில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இரண்டு பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
குயின்ஸ் வீதிக்கு அருகாமையில் அமைந்துள்ள கேட்வே பொலிவார்ட் என்னும் முகவரியில் இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது.
துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கானவர்களில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார், மற்றைய நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.
தந்தையர் தின நிகழ்வு நடைபெற்ற இடமொன்றுக்கு அருகாமையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்த ஒருவர் நாற்பது வயது மதிக்கத்தக்கவர் எனவும் அவருக்கு ஆறு சிறிய பிள்ளைகள் உள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.