ரணில் விக்கிரமசிங்கவுக்கு பதிலாக, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர் ஒருவருக்கு பிரதமர் பதவியை வழங்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதா என வினவிய போது, அவ்வாறான எந்தவொரு கோரிக்கையும் முன்வைக்கப்படவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு, ஜனாதிபதியினால், தனிப்பட்ட முறையில் இது குறித்து தெரிவிக்கப்பட்டதா என்பது தனக்குத் தெரியாது.
எவ்வாறாயினும், அத்தகைய நடவடிக்கை இருந்தால், முதலில் கட்சிக்கு அறிவிக்கப்பட வேண்டும்,
எனினும் கட்சி என்ற வகையில் அத்தகைய அறிவிப்பு எதுவும் வரவில்லை என்று சாகர காரியவசம் குறிப்பிட்டுள்ளார்.
கோரிக்கை இல்லை
எனினும், வேறு சில பிரச்சினைகளுக்கு முன்னுரிமை கொடுப்பதை விடுத்து மக்களுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்குமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பிரதமர் விக்ரமசிங்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.
இதற்கிடையில், இது குறித்து பிரதமர் அலுவலக அதிகாரி ஒருவரும், ரணில் விக்கிரமசிங்கவை பதவியில் இருந்து நீக்குவது தொடர்பான செய்தி பொய்யானது என்று குறிப்பிட்டுள்ளார்.