றொரன்டோ பெரும்பாக பகுதியில் வெப்பநிலை அதிகரிக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இரண்டு நாட்களுக்கு மிக மோசமான அளவில் வெப்பநிலை காணப்படும் என கனேடிய சுற்றுச்சூழல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
30 முதல் 35 பாகை செல்சியஸ் அளவில் வெப்பநிலை நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் புறஉதாக் கதிர்களின் தாக்கம் புள்ளி எண்ணிக்கை மிக அதிகமாக காணப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வெப்பநிலை காரணமாக காற்றின் தரம் மோசமடையக் கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.