வட அமெரிக்க பாதுகாப்பு கட்டமைப்பு பழமை அடைந்துள்ளதாகவும் அதனை மேம்படுத்துவதற்கு பெருந்தொகை பணத்தை முதலீடு செய்ய உள்ளதாகவும் கனடா அறிவித்துள்ளது.
பாதுகாப்பு அமைச்சர் அனிதா ஆனந்த் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் 20 ஆண்டு காலப்பகுதியில் சுமார் ஐந்து பில்லியன் டாலர்கள் இதற்கென செலவிடப்பட உள்ளது.
குறிப்பாக வான் பாதுகாப்பு கட்டமைப்புகள் மேம்படுத்தப்பட உள்ளதாக அனிதா ஆனந்த் தெரிவித்துள்ளார்.
சில தசாப்தங்கள் ஆகவே பாதுகாப்பு கட்டமைப்பு மேம்படுத்த படாத நிலையில் பெருந்தொகை பணத்தை முதலீடு செய்து இந்த பாதுகாப்பு கட்டமைப்பு மேம்படுத்தப்பட உள்ளது.