கனடாவில் வரலாறு காணாத அளவிற்கு பணவீக்கம் அதிகரித்துள்ளதாக புள்ளிவிபரவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
40 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கடந்த மே மாதம் பணவீக்கம் அதிகரித்துள்ளது.
கடந்த ஆண்டுடன் ஒப்பீடு செய்யும் போது இந்த ஆண்டில் நுகர்வோர் விலைச்சுட்டி 7.7 வீதமாக உயர்வடைந்துள்ளது.
ஒரு ஆண்டு இடைவெளியில் கனடாவில் எரிபொருட்களுக்கான விலைகள் 34.8 வீதத்தினால் உயர்வடைந்துள்ளது.
உணவுப் பொருட்களின் விலைகளும் சேவைகளின் கட்டணங்களும் உயர்த்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.