அதிமுக அவை தலைவராக என்னை தேர்ந்தெடுத்ததற்கு அனைவருக்கும் நன்றி. அதிமுக தொண்டர்கள் ஒரே கட்சி, ஒரே உணர்வுடன் தான் உள்ளனர்.
மேடையில் ஓபிஎஸ் மீது தண்ணீர் பாட்டில் வீசப்பட்ட சம்பவம் குறித்து எனக்கு தெரியாது. ஜூலை 11-ம் தேதி நிச்சயமாக பொதுக்குழு கூட்டம் நடைபெறும். கூட்டத்தில் ஒற்றை தலைமை தான் தீர்மானமாக நிறைவேற்றப்படும்.
தீர்மானங்கள் குறித்து ஒருங்கிணைப்பாளர்கள் பேசி முடிவு எடுப்பார்கள். எடப்பாடி பழனிசாமி தான் அதிமுகவின் பொது செயலாளராக வருவதற்கான சூழல் கண்டிப்பாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.