20 வயதுக்கு மேல் உள்ள திமிங்கலங்கள், உடலில் இருந்து உற்பத்தியாகும் மெழுகு போன்ற பொருளை வாய் வழியாக உமிழும். இதுவே, அம்பர் கிரீஸ் எனப்படுகிறது. கடலில் மிதக்கும் தன்மை கொண்ட அம்பர் கிரீஸ் உயர்தர நறுமணப் பொருட்கள் தயாரிக்க பயன்படுகிறது.
துபாய் உள்ளிட்ட நாடுகளில் நறுமணப் பொருட்கள் தயாரிப்புக்கு அம்பர் கிரீஸ் பயன்படுத்தப்படுகிறது. எகிப்தியர்கள் பழங்காலத்தில் மருந்துப் பொருளாக இதை பயன்படுத்தியுள்ளனர்.
இந்தியாவில் இதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் சிலர் பணத்திற்காக இந்த அரியகை அம்பரை வெளிநாடுகளுக்கு கடத்தி வருகின்றர். இந்த நிலையில் மதுரை மறவர் சாவடியில் ரூ.1 கோடி மதிப்புள்ள 11கிலோ திமிங்கலத்தின் அம்பர் கடத்தப்படுவதாக வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
பின்னர் சம்பவம் இடத்துக்கு வந்த வனத்துறையினர் அம்பர் கடத்தி வந்த 3 பேரை கைது செய்து அவர்களிடம் 11கிலோ திமிங்கல அம்பரை பறிமுதல் செய்தனர். தற்போது அவர்களிடம் வனத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.