Home விளையாட்டு அயர்லாந்து அணியில் அறிமுகமானார் கானர் ஒல்ப்ஹர்ட்

அயர்லாந்து அணியில் அறிமுகமானார் கானர் ஒல்ப்ஹர்ட்

by Jey

அயர்லாந்து சென்றுள்ள இந்திய அணி இரண்டு போட்டிகள் கொண்ட ‘டி-20’ தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி டப்ளினில் நடந்தது. மழை காரணமாக ‘டாஸ்’ நிகழ்வில் சிறிது தாமதம் ஏற்பட்டது. மழை நின்றதும், ‘டாஸ்’ வென்ற இந்திய கேப்டன் ஹர்திக் பாண்ட்யா, ‘பவுலிங்’ தேர்வு செய்தார்.

ஐ.பி.எல்., தொடரில் ‘வேகத்தில்’ மிரட்டிய உம்ரான் மாலிக் அறிமுக வாய்ப்பு பெற்றார். அயர்லாந்து அணியில் கானர் ஒல்ப்ஹர்ட் அறிமுகமானார்.
அயர்லாந்துக்கு எதிரான முதல் ‘டி-20’ போட்டியில், இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. காஷ்மீர் வேகப்பந்துவீச்சாளர் உம்ரான் மாலிக் அறிமுகமானார்.

‘டாஸ்’ வென்ற இந்திய கேப்டன் ஹர்திக் பாண்ட்யா, ‘பவுலிங்’ தேர்வு செய்தார். மழை குறுக்கிட, 12 ஓவர் போட்டியாக குறைக்கப்பட்டது. துவக்கத்தில் அயர்லாந்து விக்கெட்டுகள் விரைவாக சரிந்தன. புவனேஷ்வர் வீசிய முதல் ஓவரில் பால்பிர்னி(0) அவுட்டானார். ஹர்திக் ‘வேகத்தில்’ ஸ்டர்லிங்(4) வீழ்ந்தார். அவேஷ் கானிடம் டெலானி(8) சரண்டர் ஆனார். பின் ஹாரி டெக்டர், லார்கன் டக்கர் ‘டக்கராக’ ஆடினர்.

டெக்டர் வரிசையாக பவுண்டரி, சிக்சர் விளாசி தொல்லை கொடுத்தார். டக்கர், 18 ரன் எடுத்தார். டெக்டர், 29 பந்தில் அரைசதம் எட்டினார். அயர்லாந்து அணி 12 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 108 ரன்கள் எடுத்தது. டெக்டர்(64), டக்ரெல்(4) அவுட்டாகாமல் இருந்தனர்.

related posts