Home உலகம் பெலாரஸ் மக்களுக்கு ஜெலென்ஸ்கி அழைப்பு

பெலாரஸ் மக்களுக்கு ஜெலென்ஸ்கி அழைப்பு

by Jey

மைக்கோலைவ் மாகாணத்தில் இரண்டு ரஷிய வெடிமருந்து கிடங்குகளையும், கெர்சன் பிராந்தியத்தில் ஒன்றையும் அழித்ததாக கூறப்படுகிறது.

இராணுவ இலக்குகளை எதிர்க்க பெலாரஸ் மக்களுக்கு ஜெலென்ஸ்கி அழைப்பு இதுதொடர்பாக உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி நேற்று பெலாரசியர்களுக்கு ஆற்றிய உரையில், கிரெம்ளின் ஏற்கனவே உங்களுக்காக எல்லாவற்றையும் தீர்மானித்துள்ளது, உங்கள் வாழ்க்கை அவர்களுக்கு மதிப்பற்றது.

ஆனால் நீங்கள் அடிமைகளோ அல்லது பீரங்கிக்கு இரையோ அல்ல என்று அவர் தெரிவித்தார்.

உக்ரைன் மீது போர் தொடுத்ததால், ரஷியாவுக்கு எதிராக அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் ஏற்கனவே பொருளாதார தடை விதித்துள்ளன. இந்தநிலையில், அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான் ஆகிய நாடுகள் அடங்கிய ஜி-7 நாடுகள் மாநாடு, நேற்று ஜெர்மனியில் உள்ள எல்மாவில் தொடங்கியது. அதில் பங்கேற்க அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அங்கு சென்றுள்ளார்.

அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், ரஷியாவில் இருந்து தங்கம் இறக்குமதி செய்ய அமெரிக்காவும், இதர ஜி-7 நாடுகளும் தடை விதிக்க உள்ளதாக கூறினார். உக்ரைன் மீது போர் தொடுத்ததற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக அவர் கூறினார். இதுதொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு, நாளை (செவ்வாய்க்கிழமை) வெளியாகிறது. எரிசக்திக்கு அடுத்தபடியாக ரஷியா அதிகமாக ஏற்றுமதி செய்யும் பொருள் தங்கம் ஆகும். எனவே, அதற்கு தடை விதித்தால், ரஷியாவுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும் என்று கூறப்படுகிறது.

related posts