Home கனடா காரில் தனித்து விடப்பட்ட 2 வயது சிறுவன் பரிதாப மரணம்

காரில் தனித்து விடப்பட்ட 2 வயது சிறுவன் பரிதாப மரணம்

by Jey

கார் ஒன்றில் தனித்து விடப்பட்ட இரண்டு வயதான சிறுவன் ஒருவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளான்.

ஒன்றாரியோ மாகாணத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

உயர்நிலைப் பள்ளியொன்றில் கற்பிக்கும் ஆசிரியை ஒருவரின் மகன் இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

பாடசாலையில் கற்பித்து முடித்ததன் பின்னர் காருக்கு சென்று பிள்ளையை பார்த்த போது, பிள்ளை சலனமற்றிருந்தது தெரியவந்துள்ளது.

பணிக்கு செல்ல முன்னதாக பிள்ளையை சிறுவர் பராமரிப்பு இல்லத்தில் விட்டுச் செல்ல குறித்த ஆசிரியை திட்டமிட்டிருந்தார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

எனினும் ஏதோ ஓர் காரணத்தினால் குறித்த ஆசிரியை பிள்ளையை காரிலேயே விட்டு விட்டு சென்றுவிட்டார்.

கடுமையான வெப்ப நிலை காரணமாக சிறுவன் உயிரிழந்துள்ளான்.

இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முடுக்கிவிட்டுள்ளனர்.

related posts