Home விளையாட்டு விக்கெட் இழப்பின்றி வெஸ்ட் இண்டீஸ் அணி அபார வெற்றி

விக்கெட் இழப்பின்றி வெஸ்ட் இண்டீஸ் அணி அபார வெற்றி

by Jey

வங்காளதேசத்திற்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

செயிண்ட் லூசியா, வங்காளதேச அணி வெஸ்ட் இண்டீசுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் முதல் டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்றிருந்த நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியானது செயிண்ட் லூசியாவில் நடைபெற்று வந்தது.

இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பந்துவீச்சை தேர்வுசெய்தது. அதன்படி களமிறங்கிய வங்காளதேச அணி 64.2 ஓவர்களில் 234 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதையடுத்து களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி, மேயர்ஸ்சின் சதத்தின் உதவியுடன் 408 ரன்களை குவித்தது.

பின்னர் 174 ரன்கள் பின் தங்கிய நிலையில் தனது இரண்டாம் இன்னிங்சை தொடங்கிய வங்காளதேச அணி 186 ரன்களுக்குள் சுருண்டது. இதனால், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு 12 ரன்களே வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

தொடர்ந்து களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி, விக்கெட் இழப்பின்றி இலக்கை கடந்து 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. இதையடுத்து இரு அணிகளும் டி20 போட்டியில் விளையாட உள்ளது

related posts