அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இருந்து சிகாகோ நோக்கி ஆம்டிரக் ரெயில் ஒன்று சென்று கொண்டிருந்தது. அதன் வழியில் லாரி ஒன்று வந்துள்ளது. அந்த லாரி, மிசவுரி நகரில் உள்ள மென்டன் என்ற பகுதியில் வந்தபொது ரெயில்வே கிராசிங்கை கடந்துள்ளது.
அந்த பகுதியில் விளக்குகள் உள்ளிட்ட எச்சரிக்கை அம்சங்கள் எதுவும் இல்லை. இந்நிலையில், லாரி ரெயில்வே கிராசிங்கை கடந்தபோது, அதன் மீது ஆம்டிரக் ரெயில் மோதி விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் ரெயிலின் மொத்தமுள்ள 8 பெட்டிகளில் 7 பெட்டிகள் தடம் புரண்டன.
இதில் ரெயிலில் இருந்த 2 பேர் மற்றும் லாரியில் இருந்த ஒருவர் என 3 பேர் உயிரிழந்து உள்ளனர். இதுதவிர பலர் காயமடைந்து உள்ளனர். அந்த ரெயிலில் 243 பயணிகள் மற்றும் 12 ரெயில்வே ஊழியர்கள் இருந்தனர் என கூறப்படுகிறது.
இதுபற்றிய தகவல் அறிந்து ரெயில்வே நிர்வாகத்தின் பொறுப்பு குழு மீட்பு பணிக்கு சென்றுள்ளது. அவசரகால அதிகாரிகளும் பயணிகள், ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு தேவையான உதவிகளை செய்வதற்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளனர்.