கனடாவில் கடந்த ஏப்பரல் மாதம் சிறிதளவு பொருளாதார வளர்ச்சி பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
மொத்த தேசிய உற்பத்தி 0.3 வீதம் வளர்ச்சியடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கனிய வளங்கள், குவாரிகள், எண்ணெய் மற்றும் எரிவாயு அகழ்வுகளின் மூலம் இவ்வாறு உற்பத்தி அதிகரித்துள்ளதாக கனேடிய புள்ளி விபரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
எவ்வாறெனினும் நாட்டில் தொடர்ச்சியாக பணவீக்கம் அதிகரித்துச் செல்லும் போக்கினை அவதானிக்க முடிகின்றது.