எயார் கனடா நிறுவனம் விமானப் பயணங்களை வரையறுக்கப் போவதாக அறிவித்துள்ளது.
ஜுலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் விமானப் பயணங்களை வரையறுப்பதாக அறிவித்துள்ளது.
வழமையாக வழங்கப்படும் சேவைகளை வழங்க முடியாத நிலைமை உருவாகியுள்ளது என எயார் கனடா நிறுவனத்தின் தலைவர் மைக்கல் ரொசேயூ தெரிவித்துள்ளார்.
கோடை காலத்தில் விமானப் பயண சேவைகளை வரையறுத்துக் கொள்ளத் திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.