எரிபொருளுக்கான வரி குறைப்பு குறித்து ஒன்றாரியோ முதல்வர் டக் போர்ட் அதிகாரபூர்வமாக இன்றைய தினம் அறிவிக்க உள்ளார்.
பிரம்டனில் இன்றைய தினம் இவ்வாறு முதல்வர் எரிபொருள் வரி குறைப்பு குறித்து அறிவிக்கப்பட உள்ளது.
வரி குறைப்பு குறித்து அறிவிக்கும் ஊடக சந்திப்பில் நிதி மற்றும் போக்குவரத்து அமைச்சர்களும் பங்கேற்க உள்ளனர்.
வரி குறைப்பு மூலம் பெற்றோலின் விலை 5.7 சதங்களினாலும், டீசலின் விலை 5.3 சதங்களினாலும் குறைக்கப்பட உள்ளது.
அண்மைய நாட்களாக ஒன்றாரியோவில் எரிபொருள் விலை கட்டுக்கு அடங்காத அளவில் உயர்வடைந்து செல்கின்றமை குறிப்பிடத்தக்கது.