பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் சபாநாயகராக தேர்தெடுக்கப்பட்ட முதல் பெண் என்கிற பெருமையை யேல் பிரவுன் பிவெட் பெறுகிறார்.
பிரான்சில் அண்மையில் நாடாளுமன்ற தேர்தல் நடந்து முடிந்தது. அதில் அதிபர் மேக்ரான் தலைமையிலான மையவாத கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்றபோதும், பெரும்பான்மையை பெற தவறியது.
இந்த நிலையில் தேர்தலுக்கு பிறகு முதல் நாடாளுமன்ற கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. முதல்நாள் கூட்டத்தொடரில் நாடாளுமன்ற கீழவையின் சபாநாயகரை தேர்வு செய்வதற்கான ரகசிய ஓட்டெடுப்பு நடந்தது.
இதில் மேக்ரானின் மையவாத கூட்டணியின் சார்பில் வேட்பாளராக நிறுத்தப்பட்ட யேல் பிரவுன் பிவெட் என்கிற பெண் எம்.பி. எதிர்க்கட்சிகளின் வேட்பாளர்களை விட அதிக வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார்.