பலரிடம் மோசடி செய்ததாக 22 வயதான இளைஞர் ஒருவருக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
றொரன்டோவில் இந்த சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
போலி காசோலைகளை பயன்படுத்தி குறித்த இளைஞர் பலரை ஏமாற்றியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த 2021ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் இந்த ஆண்டு பெப்ரவரி மாதம் வரையிலான பத்து மாத காலப் பகுதியில் இந்த மோசடிகள் பதிவாகியுள்ளன.
டைரிஸ் கெம்பல் என்ற 22 வயதான இளைஞருக்கு எதிராகவே இவ்வாறு குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.