ஒன்றாரியோவில் பலருக்கு கோவிட் 4ம் தடுப்பூசி ஏற்றப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
60 வயதுக்கும் உட்பட்ட பலருக்கு இன்னும் நான்காம் தடுப்பூசி ஏற்றுவதற்கு அனுமதி வழங்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.
சில மாகாணங்களில் நான்காம் மாத்திரை தடுப்பூசி ஏற்றப்பட்டு வரும் நிலையில் ஒன்றாரியோவில் முனைப்புக்கள் குறித்து அதிருப்தி வெளியிடப்பட்டுள்ளது..
நான்காம் மாத்திரை தடுப்பூசி பெற்றுக் கொள்ளும் தகமையை விஸ்தரிக்கும் நோக்கில் மருத்தவர் ஒருவர் நீதிமன்றின் உதவியை நாட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
ஒமிக்ரோன் திரிபு பரவத் தொடங்கியுள்ள நிலையில் நான்காம் மாத்திரை தடுப்பூசி அத்தியாவசியமானது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.