நாமக்கல் நடந்த உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநாட்டில் ஸ்டாலின் பேசியதாவது: உள்ளாட்சி அமைப்புகள் தான் மக்களாட்சியின் உயிர்நாடி.
தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களும், ஊர்களும் வளர வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
பெண்கள் உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றது சாதாரணமானது அல்ல. அண்ணாதுரை, காமராஜர், ராஜாஜி ஆகியோர் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டவர்கள்.
நானும் சென்னை மேயராக இருந்துள்ளேன். மக்கள் பணியில் முதல் பணி உள்ளாட்சி அமைப்புகள் தான்.
அதன் மூலம் தான் மக்களுக்கு நேரடியாக தொண்டாற்றும் பயிற்சியை பெறும். மக்கள் தொண்டுக்கு பயிற்சி பெறும் வாய்ப்பு உங்களுக்கு கிடைத்துள்ளது. தமிழகத்தின் அனைத்து ஊர்களும் மாற வேண்டும்.
அனைத்து மாவட்டங்களும், ஊர்களும் வளர வேண்டும். அது உங்களின் கைகளில் உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.