Home உலகம் உக்ரைன் மீட்பு மாநாடு 2023 இங்கிலாந்தில்

உக்ரைன் மீட்பு மாநாடு 2023 இங்கிலாந்தில்

by Jey

உக்ரைனில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் தங்கள் வாழ்வாதாரங்களை இழந்து, அண்டை நாடுகளில் அகதிகளாக தஞ்சம் அடைந்துள்ளனர்.
உக்ரைன் மீது ரஷிய படைகள் கடந்த பிப்ரவரி மாதம் 24-ந்திகதி தொடங்கிய தாக்குதல், தற்போது வரை நீடித்து வருகிறது. இந்தப் போரில் இரு நாடுகளின் தரப்பிலும் அதிக அளவில் உயிர்சேதம் ஏற்பட்டுள்ளது. அதே சமயம்

இதனிடையே போரில் உருக்குலைந்து உக்ரைன் நாட்டிற்கு உதவுதற்காக சர்வதேச நாடுகள் உறுதியளித்துள்ளன. இங்கிலாந்து சார்பில் 1.5 பில்லியன் டாலர் அளவிலான கடன் உதவிகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டிற்கான(2022) உக்ரைன் மீட்பு மாநாடு சுவிட்சர்லாந்தில் இன்று நடைபெறுகிறது.

இந்த நிலையில் அடுத்த ஆண்டு, உக்ரைன் மீட்பு மாநாடு 2023 இங்கிலாந்தில் நடத்தப்படும் என அந்நாட்டின் வெளியுறவு அலுவலகம் தெரிவித்துள்ளது. இந்த மாநாட்டில், போரால் உருக்குலைந்த உக்ரைனை எவ்வாறு மீண்டும் கட்டியெழுப்புவது என்பது பற்றி விவாதிக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

related posts