எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றில் இராணுவ அதிகாரி ஒருவர் இளைஞனை எட்டி உதைக்கும் சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பான காணொளிகள் சமூகவலைத்தளங்களில் வெளியிடப்பட்டுள்ள நிலையில் அதனை பலரும் பகிர்ந்து வருகின்றனர்.
எரிபொருள் கேட்ட நபரை எட்டி உதைக்கும் குறித்த இராணுவ அதிகாரி ஏற்கனவே குற்றச்சாட்டில் சிக்கியவர் என தெரியவந்துள்ளது.
இராணுவ அதிகாரி பணி என்பது மிகவும் மனிதாபிமானமிக்க ஒரு பணியாகும். அதனை சரியான முறையில் மேற்கொள்ள வேண்டும் என சிரேஷ்ட மனித உரிமை அதிகாரி ரஞ்சித் கீர்த்தி தெரிவித்துள்ளார்.
மொரட்டுவ, வாரியபொல, கம்பஹா உட்பட நாடு முழுவதும் இராணுவம் நடத்திய தாக்குதல்களுக்கு அந்தந்த இராணுவத் தலைவர்களே நேரடியாகப் பொறுப்பாளிகள் என்பதை இந்த சம்பவம் சுட்டிகாட்டுவதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
எரிபொருள் நிரப்பு நிலையங்களை கட்டுப்படுத்துவதற்கு பொலிஸாருக்கு பதிலாக இராணுவத்தினரைக் கட்டுப்படுத்து அனுப்பியதன் மூலம் இலங்கை உலகத்தின் முன் மிக மோசமான தேசமாக முத்திரை குத்தப்பட்டு வருகின்றது.