வெஸ்ட் இண்டீசை சேர்ந்த சந்தர்பால் அமெரிக்க பெண்கள் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். வாஷிங்டன், வெஸ்ட் இண்டீஸ் அணியின் சிறந்த பேட்ஸ்மேனான சிவனரைன் சந்தர்பால், அமெரிக்காவின் சீனியர் பெண்கள் மற்றும் யு-19 அணிகளின் தலைமைப் பயிற்சியாளராக 18 மாத காலத்திற்கு நியமிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க கிரிக்கெட் வாரியம் தெரிவித்து உள்ளது.
தேசிய பெண்கள் மற்றும் 19 வயதுக்குட்பட்ட அணிகளின் தலைமைப் பயிற்சியாளராக சிவநரைன் சந்தர்பால் நியமிக்கப்பட்டுள்ளார் என்பதை யுஎஸ்ஏ கிரிக்கெட் அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறது” என்று யுஎஸ்ஏ கிரிக்கெட் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சந்தர்பால் கூறுகையில், “அமெரிக்க தேசிய மகளிர் அணி மற்றும் 19 வயதுக்குட்பட்ட பெண்கள் அணிக்கு தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.
அமெரிக்க தேசிய மகளிர் அணி மற்றும் 19 வயதுக்குட்பட்ட பெண்கள் அணியை சிறந்த அணியாக முன்னெடுத்துச்செல்ல அனைத்து வகையிலும் பக்கபலமாக இருப்பேன். இவ்வாறு அவர் கூறினார். வெஸ்ட் இண்டீசின் இடதுகை பேட்ஸ்மேனான சந்தர்பால், டெஸ்ட் கிரிக்கெட்டில் 10,000 ரன்களுக்கு மேல் எடுத்த 14 கிரிக்கெட் வீரர்களில் ஒருவராவார். வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக 164 டெஸ்ட் மற்றும் 268 சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் விளையாடியுள்ளார்