Home இலங்கை அறிக்கையொன்றை இன்று வெளியிட்ட இலங்கை இராணுவம்

அறிக்கையொன்றை இன்று வெளியிட்ட இலங்கை இராணுவம்

by Jey

பதிவு செய்த இளைஞனுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இதனால் குடும்பத்துடன் வீட்டை விட்டு வெளியேறி இருப்பதாக காணொளியை பதிவு செய்த இளைஞர் இணைய ஊடகம் ஒன்றில் நடந்த விவாதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

எரிபொருள் வழித்தடத்தில் இருந்த இளைஞரை இராணுவ வீரர்கள் சிலர் கொடூரமாக தாக்கும் காணொளி சமூக வலைதளங்களில் பகிரப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பில் உள்ளக விசாரணையை இலங்கை இராணுவம் ஆரம்பித்துள்ளது.

தாக்குதலை நடத்திய இராணுவ அதிகாரி இராணுவத்தின் லெப்டினன்ட் கர்னல் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இந்த சம்பவம் தொடர்பில் விசாரணை செய்து பரிந்துரைகளை வழங்குவதற்காக ஐவர் அடங்கிய விசாரணை குழு (CoI) நியமிக்கப்பட்டுள்ளதாக இலங்கை இராணுவம் (SLA) தெரிவித்துள்ளது.

அறிக்கையொன்றை இன்று வெளியிட்ட இலங்கை இராணுவம், “குடிபோதையில் இருக்கும் பொதுமக்களின் வன்முறையான நடத்தையை முன்வைக்காமல் அவரைக் கேலி செய்வதற்காக” இராணுவ உறுப்பினரின் ஆக்ரோஷமான தன்மைக்கு ஊடகங்களில் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது.

எவ்வாறாயினும், இராணுவத் தளபதியின் உத்தரவின் பேரில் மேற்கு பாதுகாப்புப் படைத் தலைமையகம் உடனடியாக ஐந்து பேர் கொண்ட விசாரணை குழுவை (CoI) நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

related posts