ஆன் — லைன் வசதியை பயன்படுத்த துவங்கியதால் பல இடங்களில் வரிசையில் நிற்பது ஒழிந்துள்ளது,” என, பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.
குஜராத்தின் காந்தி நகரில் நேற்று, ‘டிஜிட்டல் இந்தியா’ நிகழ்ச்சியை துவக்கி வைத்து பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:மக்களின் வாழ்க்கை முறையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியதில், டிஜிட்டல் வசதி முக்கியப் பங்கு வகிக்கிறது.
கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் பிறப்புச் சான்றிதழ், கட்டணம் செலுத்துதல், பள்ளி மற்றும் கல்லுாரி அட்மிஷன், தேர்வு முடிவுகள் மற்றும் சான்றிதழ் பெறுதல், வங்கி உள்ளிட்ட இடங்களில் வரிசையில் நின்று காத்திருந்தோம்.
ஆனால், டிஜிட்டல் வசதியை பயன்படுத்த துவங்கிய பிறகு வரிசையில் காத்திருந்து நேரத்தை வீணாக்குவது முற்றிலும் ஒழிக்கப்பட்டு விட்டது. மத்திய அரசின் டிஜிட்டல் இந்தியா திட்டம், ஊழல்வாதிகளிடம் இருந்து ஏழைகளை காப்பாற்றியுள்ளது மட்டுமின்றி, இடைத்தரகர்களையும் ஒழித்துள்ளது.இவ்வாறு அவர் பேசினார்.