Home இந்தியா ஆதிகேசவ பெருமாளுக்கு 418 ஆண்டுகளுக்கு பின் கும்பாபிஷேகம்

ஆதிகேசவ பெருமாளுக்கு 418 ஆண்டுகளுக்கு பின் கும்பாபிஷேகம்

by Jey

திருவட்டார் ஆதிகேசவ பெருமாளுக்கு, 418 ஆண்டுகளுக்கு பின் இன்று (ஜூலை 6) கும்பாபிஷேகம் நடைபெற்றது.

பெரிய வைணவ திருத்தலங்கள், 108ல் ஒன்றான திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவில் திருவிதாங்கூர் மன்னர் காலத்தில் கட்டப்பட்டது. திருவனந்தபுரம் பத்மனாபசுவாமி கோவில், திருவட்டார் கோவில் கட்டிய பின் இதே மாடலில் கட்டப்பட்டது.

இங்கு பெருமாள் அனந்த சயனத்தில் மூன்று வாசல்களில் காட்சி தருகிறார். மூலவர் பெருமாளின் திருமேனி 22 அடி நீளம். 16 ஆயிரத்து எட்டு சாளக்கிராம கற்கள் மற்றும் கடுசக்கரையில் உருவாக்கப்பட்டது.

சிறப்பு வாய்ந்த இந்த கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்து 16 ஆண்டுகளுக்கு முன் பணிகள் தொடங்கியது. பல தடங்கல்களுக்கு பின் பணிகள் நிறைவு பெற்றுள்ளன.

இதையடுத்து, ஜூன் 29ல் யாகசாலைப் பூஜைகள் தொடங்கின. இன்று காலை 6:00 முதல் 6:50 மணிக்குள் கும்பாபிஷேகம் நடைபெற்றது. தங்க முலாம் பூசப்பட்ட கொடிமரமும் பிரதிஷ்டிக்கப்பட்டது. இதையடுத்து திருவட்டாரே விழாக்கோலம் பூண்டுள்ளது.

related posts